தகவல் பகுதி
கோபுர தரிசனம்
கோடி புண்ணியம். கோபுரத்தை வணங்கியபின் ஆலயத்திற்குள்
செல்ல வேண்டும். கோவிலில் நுழைந்தவுடன் பலிபீடம், கொடிமரம் இருக்கும். அதன் முன்புறம் மட்டுமே வடக்கு நோக்கி அல்லது கிழக்கு நோக்கி விழுந்து வணங்க வேண்டும். கோவிலுக்குள் மற்ற இடங்களில் விழுந்து
வணங்கக் கூடாது.
தமிழ்நாடு
சிவன் கோயில்கள் - இருப்பிட விபரங்கள் ...
தேவார மூவர் என்று
போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்,
சுந்தரர் ஆகியோரால்
இயற்றப்பெற்ற தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்பெற்றுள்ள 274 சிவஸ்தலங்களில் தமிழ்நாட்டில் மட்டும்
(பாண்டிச்சேரி உட்பட) 264 சிவஸ்தலங்கள்
உள்ளன. இந்த 264 கோவில்களிலும்
190 சிவஸ்தலங்கள் முன் காலத்தில்
சோழ நாடு என்று குறிப்பிடப்படும் பகுதியான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் (Districts)
அமைந்துள்ளன. இவை காவிரியின்
வடகரையில் 63ம்,
காவிரியின்
தென்கரையில் 127ம்
ஆக 190 சிவஸ்தலங்கள். மற்ற 74
சிவஸ்தலங்களில்
பாண்டிய நாட்டில் 14, கொங்கு நாட்டில்
7, தொண்டை நாட்டில் 31,
நடு நாட்டில் 22
ஆக அமைந்துள்ளன.
தமிழ்நாடு சிவன்
கோவில்கள் - ஒரு அறிமுகம் ...
எழுத்துரு சற்று
பெரியதாக இருந்தால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்திருந்தனர். அதன்படி இந்த இணையதளம் சற்று மாற்றி வடிவமைக்கப்பட்டு
உள்ளது. உங்கள் கருத்துக்களைக் கூறும்படி கேட்டுக கொள்கிறோம்
இமயம் முதல் குமரி
வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் எண்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல
சிவன் கோவில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல்
பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோவில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோவில்கள்
ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.
மஹாபாரதத்தில்
வேதவியாசர் அர்ஜுனனை பார்த்து "எவன் ஒருவன் வைகறைத் துயிலெழுந்து
மனத்தூய்மையோடு ருத்ர ஜபம் செய்கின்றானோ அவன் இவ்வுலகில் அடைய முடியாத ஐஸ்வர்யம் எண்று
எதுவும் இல்லை" என்று சொல்கிறார்.
கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப்
பெறுவதற்குத் துனையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும்
வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா
உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும்
சிவமயம்! எதிலும் சிவமயம்!
ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை
தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும்.
சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோவில்களைக் கட்டி சிவன் திருப்பணி
செய்து புகழ் பெற்றான். சிவன் கோவில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ
நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.
அடியார்கள்
போற்றும் அம்பலத்தரசன் அமர்ந்திருக்கும்
தேவாரப் பாடல் பெற்ற 274 சிவஸ்தலங்களில் தமிநாட்டில் உள்ள 264 தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களைப்
பற்றிய வலைத்தளம் இது. இந்த 264 கோயில்களும்
தமிழ்நாட்டில் எங்கெங்கு உள்ளன, அங்கு எப்படி
செல்வது, அவற்றின் சிறப்புகள் யாவை என்பது பற்றிய
ஓர் சிறிய கண்ணோட்டம் தான் இந்த முயற்சி.
இணையதளத்தைப்
பற்றி
www.shivatemples.com
தனது ஒன்பதாவது
ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுநாள் வரை இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள்
அனைவருக்கும் நன்றி. மூன்றாவது ஆண்டு
துவக்கத்தில் இந்த இணையதளத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது. ஆங்கிலப் பதிப்பை விட தமிழ் பதிப்பில்
அதிக செய்திகள், அதிக விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழ் பதிப்பை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கோருகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக