செவ்வாய், 8 நவம்பர், 2016

பாவ்லோவின் சோதனை

பாவ்லோவின் சோதனை
     ஒரு கூண்டினுள் பசியுள்ள ஒரு நாய் விடப்பட்டது. கூண்டினுள் வெளியே நாய்க்கு உணவு ஒரு தட்டில் வைக்கப்பட்டது. உணவினை கண்டவுடன் நாய்க்கு உமிழ்நீர் சுரந்தது. இச்சோதனை சில நாட்கள் தொடர்ந்தது. அதன் பின்னர் மணியோசை எழுப்பப்பட்ட ஒரு சில வினாடிகள் நாய்க்கு உணவு வழங்கப்பட்டது. இச்சோதனையும் சில காலம் தொடர்ந்தது. இச்சோதனைக்குப் பிறகு மணியோசை மட்டும் எழுப்பபட்டது. நாய்க்கு உணவு வழங்கப்படவில்லை. உணவு வழங்கப்படாத நிலையிலும் நாய் உமிழ்நீரைச் சுரந்தது. இச்சோதனையிலிருந்து நாம் அறிவது உணவு என்பது இயற்கையான தூண்டலாகும். உமிழ்நீர் சுரத்தல் என்பது இயற்கையான துலங்கல் ஆகும். மணி ஓசை செயற்கைப் புறத் தூண்டால் ஆகும்.செயற்கைப் புறத் தூண்டல் மூலமும் இயற்கையான துலங்கலை ஏற்படுத்த முடியும் என்பதை பாவ்லோ தான் மேற் கொண்ட சோதனை மூலம் நிருபித்தார்.
தூண்டல்                               துலங்கல்
உணவு - இயற்கை தூண்டல்             உமிழ்நீர் - இயற்கை துலங்கல்
உணவு + மணியோசை(செயற்கை         உமிழ்நீர் - இயற்கை துலங்கல்
 புறத்தூண்டல்)
மணியோசை  (செயற்கை புறத்தூண்டல்)   உமிழ்நீர் - இயற்கை துலங்கல்
ஆக்க நிலையுருத்தக் கோட்பாடுகள்
ஆக்க நிலையுறுத்தல் அழிந்து போதல் வீதி
       செயற்கைப் புறத்தூண்டல் வழங்கி வெகுமதிகள் வழங்கப்படவில்லை. எனில் இயற்கை துலங்கல் படிப்படியாக குறைந்து அழிந்து போகும்.உதாரணமாக மணியோசை எழுப்பிய பின் நாய்க்கு பலமுறை உணவு வழங்கப்படவில்லை எனில் மணியோசைக்கு நாய் உமிழ்நீர் சுரப்பதை நிறுத்திவிடும்.
தூண்டல் பொதுமை விதி
       மணியோசைக்கு முன்னதாக ஒரு சிகப்போளியைக் காண நாய் உட்படுத்தப் படுவதாக கொள்வோம். சிகப்போளியைத் தொடர்ந்து மணியோசைக்கு முன்னதாகவே நாய்க்கு உணவு வழங்கப்படுவதாகவும் வைத்து கொள்வோம். சிகப்போளியைப் பார்த்த மாத்திரத்திலே நாய்க்கு உமிழ்நீர் சுரக்க ஆரம்பித்து விடும். ஏற்கனவே ஒரு செயற்கை தூண்டலுக்கு ஒரு உயிர் உட்படுத்தப்பட்டியிருந்தாலும் இதே போன்ற ஒரு செயற்கை தூண்டலுக்கு அவ்வுயிர் இயற்கை துலங்கலை அளிக்க முடிகிறது என்பது தெளிவாகிறது. இதனை இரண்டாம் ஆக்க நிலையுறுத்தல் என அழைக்கலாம்.
வேறுபடுத்தி அறிதல் விதி    
       பல்வேறு சூழல்களை வேறுபடுத்தி அறிந்து அதற்கேற்ப துலங்கல்களை ஒரு உயிரி வெளியிட முடியும். பலவிதமான செயற்கை தூண்டலுக்கு மட்டுமே ஒரு உயிரி துலங்களை அளிக்க முடிகிறது. உதாரணமாக இதர ஒளிகளான மஞ்சள், சிகப்பு போன்றவற்றிற்கு நாய் உமிழ்நீர் சுரக்கும்படி செய்யலாம். நாயானது ஒளிகளை வேறுபடுத்தி அறிந்து குறிப்பிட்ட  ஒளிக்கு மட்டுமே உமிழ்நீர் சுரக்கிறது என்பது இதனால் அறியப்படுகிறது.
இயற்கையாகவே முந்தைய நிலையடைதல் விதி
       ஆக்க நிலையுறுத்தம் அழிந்து போனாலும், அதாவது செயற்கை தூண்டலுக்கு இயற்கை துலங்கல் மறைந்து போனாலும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின் செயற்க்கைதூண்டலுக்கு [மணியோசை] மீண்டும் இயற்க்கைதுலங்கள் வெளிப்படுத்தப்படும். இதனை ‘’இயற்கையாகவே முந்தைய நிலையடைதல் விதி’’ என்றழைக்கிறோம்.
ஆக்க நிலையுறுத்தலில் கல்வித் தாக்கங்கள்
    நாம் அன்றாட வாழ்வில் ஆக்க நிலையுறுதத்தின் தாக்கங்களை காணமுடிகிறது.
1.        பெற்றோரை கண்டு சில குழந்தைகள் மிகவும் பயப்படுகின்றன அல்லது ஆசிரியரை குழந்தைகள் மிகவும் விரும்புகின்றன என வைத்து கொள்வோம். பயப்படுதல் அல்லது விரும்புதல் போன்ற செயல்கள் ஆக்க நிலையுறுத்தலின் விளைவுகளேயாகும்.
2.        வேறுபடுத்தி அறிதல் விதி மூலம் ஒரு குழந்தை எல்லா மனிதர்களையும் அல்லது பொருட்களையும் ஒரே பெயர் கொண்டு அழைப்பது இல்லை. வேறுபடுத்தி அறிதலை குழந்தைக்கு ஆசிரியர் சரியாகக் கற்றுத்தர வேண்டும்.
3.        ஆக்க நிலையுறுத்தல் மூலம் நமது ஆர்வங்களையும் மனப்பான்மைகளையும்,பழக்க வழக்கங்களையும் மேம்படுத்தி கொள்ளலாம்.
4.        மாணவர்களிடம் காணப்படும் மூடப்பழக்க வழக்கங்கள் எதிர்மறை மனப்பான்மைகள், கெட்ட பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை ஆக்க நிலையுறுத்தல் மூலம் மறையச் செய்யலாம்.
5.        விருப்பமில்லாத சூலல்களைக்கூட ஆக்கநிலையுறுத்தல் மூலம் மாணவர்கள் விரும்பும்படி செய்யலாம். இது மாணவர்கள் கற்றலில் மேன்மைநிலை அடைய உதவிடும்.
ஸ்கின்னரின் செயல்பாடு ஆக்க நிலையுருத்தம்
 ஒவ்வொரு உயிரியும் பலவிதமான துலங்கல்களை தன்னிச்சையாக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு வெளிப்படுத்தப்படும் துலங்கல்களில் நாம் விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் துலங்களுக்கு பாராட்டுதல் அல்லது வெகுமதி அளித்தல் போன்ற வலுவூட்டிகளை உடனே அளித்தால்அந்தத் துலங்கல்கள் மீண்டும் மீண்டும் தோன்றி உயிரியிடம் வலுப்படுத்தப்படுகின்றன. பழைய ஆக்க நிலையுறுத்தலில் ஒரு துலங்கல் நடைபெற வேண்டுமானால் கட்டாயம் ஒரு தூண்டல் வேண்டும். தூண்டல் இல்லாமல் துலங்கல் இல்லை என்ற கருத்தை ஸ்கின்னர் ஏற்றுக் கொள்ளவில்லை.
       நடத்தையை செயல்படுத்தி அதனால் பெறப்படும் விளைவுகளால் உயிரி அதனை நிலையுறுத்தம் செய்து கொள்கிறது. இத்தகைய நடத்தையை ஆக்க நடத்தை என்றும் இது தொடர்பான கற்றல் செயல்முறையை ஆக்க நிலையிருத்தல் என்றும் ஸ்கின்னர் அழைக்கிறார்.
ஸ்கின்னர் சோதனை
புறாவை பயன்படுத்தி ஸ்கின்னர் தன் சோதனையை மேற்கொண்டார். புறாவுக்கான கூண்டினுள் புறா விடப்பட்டது.புறாவுக்கு எட்டும் உயரத்தில் ஒரு பிளாஸ்டிக் குமிழ் இருந்தது அந்த குமிழை புறா கொத்தும் போது தானியம் விழும் வகையில் அது அமைக்கப்பட்டு இருந்தது.ஒவ்வொரு முறையும் புறா குமிழை கொத்தும் போது தானியம் கொட்டியது.தானியம் என்று வெகுமதி கிடைத்ததால் மீண்டும் மீண்டும் அந்த குமிழை கொத்தி புறா தானியத்தைப் பெற்றது. குமிழை கொத்துதல் என்ற செயலை [Operant] செய்ய உணவு தானியம் தூண்டலாக [Stimulus] விளங்குகிறது.கொத்துதல் என்ற செயல் நடைபெறும் போதெல்லாம் புறாவுக்கு உணவு என்ற பரிசு கிடைப்பதால் கொத்துதல் என்ற செயலை [Respons] புறா வேகமாக கற்று கொள்கிறது.
ஸ்கின்னர்  கோட்பாட்டின் கல்வி முக்கியத்துவம்
       கற்றல் அனுபவங்களை மாணவர்களுக்கு ஏற்படுத்தி தருவதில் ஸ்கின்னர் கோட்பாடுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
1.               தனியாள் வேறுபாடுகளுக்கேற்ற கற்றலை அமைத்து தருதலில் திட்டமிடப்பட்ட கற்றல், கற்பித்தல் இயந்திரங்கள் மற்றும் கணினி உதவியுடன் கற்பித்தல் ஆகியவை பயன்படுத்தபடுகின்றன. இம்முறையில் மாணவர்களின் எதிர்பார்த்த நடத்தைகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படுதலைப் பார்க்கிறோம்.
2.               வகுப்பறையில் ஆசிரியர் விரும்பும் நடத்தைகளை மாணவர்கள் வெளிப்படுத்தும்போது அவர்களுக்கு பாராட்டுகள் அல்லது பரிசுகள் வழங்கப்படுதல் வேண்டும்.
3.               மொழியை கற்று கொள்ளுதல் இக்கோட்பாட்டின் அடிப்படையில் தான் நடைபெறுகிறது. பெற்றோர் அல்லது மூத்தோர் குழந்தையின் மொழி கற்றலை பரிசுகள் மற்றும் பாராட்டுகள் மூலம் ஊக்கப்படுத்துகின்றனர்.
4.               மாணவர்களின் நடத்தைகளின் அடிப்படையில் ஆசிரியர் பின்னூட்டம் வழங்குதல் வேண்டும்.
5.               தண்டனைகளை தவிர்க்கவும், நடத்தைகளுக்கு வெகுமதிகள் வழங்கவும் எதிர்பாராத நடத்தைகளை ஒதுக்கி விடவும் இக்கோட்பாடு  வலியுறுத்துகிறது.
வேறுபாடுகள்     
        NO. பழைய  ஆக்க நிலையுறுத்தம்     
1.               ரஷ்ய உளவியல் அறிஞர் பாவ்ளோவால் வெளியிடப்பட்டது
2.               துலங்கல் நடைபெற தூண்டல் வேண்டும்.
3.               செயல் நிகழ்வதற்கு முன்னரே வலுவூட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
4.               மணியோலிக்குப்பின் ஒவ்வொரு முறையும் வலுவூட்டி வழங்கப்படுகிறது.
5.               தூண்டலை தொடர்ந்து துலங்கல் நடைபெறுகிறது.
6.               உமிழ்நீர் சுரத்தல் என்பது இயல்பூக்கத்தால் நடைபெறுகிறது.
7.               எளிமையான தூண்டல் துலங்கல் நிகழ்வு நடத்தை என்று அழைக்கப்ப்டுகிறது.
   செயல்பாடு ஆக்க நிலையுறுத்தம்
1.               அமெரிக்க உளவியல் அறிஞர் ஸ்கின்னாரால் வெளியிடப்பட்டது.
2.               துலங்கல் நடைபெற தூண்டல் வேண்டியது இல்லை
3.               செயல் நிகழ்ந்தபின்னரே வலுவூட்டி கிடைக்கிறது.
4.               உயிரியின் செயல்தான் அது பெரும் வலுவூட்டியை தீர்மானிக்கிறது.
5.               செயல் நடத்தையைத் தொடர்ந்து தூண்டலும் தூண்டலைத் தொடர்ந்து துலங்களும் நடைபெறுகிறது.
6.               தீவிரமான செயல்பாட்டினால் உணவு கிடைக்கிறது.
7.               தொடர்ச்சியாக நடைபெறும் சிக்கலான செயல்கள் நடத்தை என்று அழைக்கப்படுகிறது.
உட்கட்சி வழிக்கற்றல்
உட்கட்சி வழிக்கற்றல் அறிதிறன் வகையைச் சார்ந்தது. இவ்வகைக் கற்றலை வெளியிட்டவர் கெஸ்டால்ட் என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய உளவியல் அறிஞர்களில் ஒருவரான கோஹ்ளர் என்பவர் ஆவார். கெஸ்டால்ட்என்ற  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக