வியாழன், 28 ஜனவரி, 2016

கல்வியியல் வினாக்கள் (Education questions)


கல்வியியல் வினாக்கள் (Education questions)

ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB)  நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (PG TRB EDUCATION) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு. இனிவரும் பதிவுகளிலும் வினாக்கள் தொடரும். இதனை வாசிப்பவர்கள் தயவுசெய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வாசித்து அனைவரும் பயன்பெறவும் தங்களின் கருத்துக்களையும் தெரிவிக்கவும்.

1.கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு - சாப்ரு கமிட்டி
2.நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _ மெக்டொனால்டு
3.இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது - லட்சுமண முதலியார் குழு
4.தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1978
5.மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்
6.பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி
7.குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு - 24
8. சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934
9.தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது - 15-35
10.கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம்
11.கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு - டாக்டர் ஷரிமாலி குழு
12.நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் - ராஜிவ்காந்தி
13.தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது - உடுமலைப்பேட்டை அருகே
14.சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் -நமது பாதுகாப்பு அமைச்சர்
15.சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச்செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள். அமெரிக்கா, கனடா
16.விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம்
17.ஒருவரது கவனவீச்சினை அறிய உதவும் கருவி - டாசிஸ்டாஸ்கோப்
18.டிஸ்கவரி ஆப் தி சைல்ட்  என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மரியா மாண்டிசோரி
19.நுண்ணறிவு சோதனையின் தந்தை - ஆல்பிரெட் பீனே
20.ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - அரவிந்தர்
21.தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன - கெல்லர் திட்டம்
22.சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் - ஹெர்பர்ட் ஸ்பென்சர்
23. உளவியலில் லோகஸ் என்ற சொல்லின் பொருள் - அறிவியல்
24.செயல்படு ஆக்கநிலையிறுத்தம் - ஸ்கின்னர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய விலங்கு - எலி
25.கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் - முழுமை
26.உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் - சுல்தான்
27.நீந்தக்கற்றலின் அடிப்படை - செய்திறன் கற்றல்
28.அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் - மெக்லிலெண்டு
29.மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்
30.நுண்ணறிவு ஈவுடன் தொடர்புடைய பரவல் - இயல்நிலைப்பரவல்

-------------------------------------------------------------------------------------------------------------
1.மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
2.கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை
3.இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ
4.கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் - NCERT

5.யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி
6. SSA என்பது - அனைவருக்கும் கல்வி இயக்கம்
7.RMSA என்பது - மத்திய இடைநிலை கல்வி இயக்கம்
8.ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக்
9. மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை
10.தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் -ஏ.எஸ்.நீல்
11.மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ்
12.மனித ஆளுமையை உருவாக்குவது - மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள்
13.குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - ஸ்டான்லி ஹால்
14.PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது - லத்தின்
15.மனிதர்களை அகமுகன் புறமுகன் என்று வகைப்படுத்தியவர் - யூங்
16.உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் - பிராய்ட்
17.இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர் - ஸீஷோர்
18.வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST) - 5
19.குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர் - தர்ஸ்டன்
20.ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது - மறத்தல் கோட்பாடு
21.மக்டூகலுடன் தொடர்புடையது - இயல்பூக்க கொள்கை
22.பகற்கனவு என்பது ஒருவகை - தற்காப்பு நடத்தை
23.ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும் - புறத்தேற்று நுண்முறை
24.சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர் - ஜே ஜே கார்டன்
25.சாந்தி நிகேதன் என்பது - ஆசிரமப்பள்ளி
26.சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர் - ரூசோ
27.பள்ளிக்கு கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் - கிருஷ்ணமூர்த்தி
28.பள்ளியும் குழந்தையும் என்ற நூலின் ஆசிரியர் - டூயி
29.நாளைய பள்ளி என்ற நூலின் ஆசிரியர் - டூயி
30.சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர் - ஏ.எஸ் . நீ

1 கருத்து: